New Flag.png

இந்துவேதம்.காம் பற்றி (ABOUT INDUVEDAM.COM)

About Us:


“இந்து மறுமலர்ச்சி இயக்கம்”
( “Indu Renaissance Movement” in English )
( “Indu Marumalarchi Iyakkam” in Tamil to English )
     
“இந்து மறுமலர்ச்சி இயக்கம்” பதினெண்சித்தர் மடம் பீடத்தின் கீழ், பேரருள்மிகு குருதேவர் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி ஐயா அரசயோகிக் கருவூறார் அவர்களின் அருளுலகத் தலைமையிலும் வழிகாட்டுதலின்படியும், குருவுள திருவுள ஒப்புதலும், குருவாணையும் திருவாணையும் பெற்று, தமிழக அரசிடம் பதிவு செய்யப்பட்டு, உலக மக்களுக்கு சித்தர்நெறி எனும் இந்துவேதத்தை மக்களின் நலனுக்கும் வளத்திற்கும் வழங்கிவருகிறது.
ஆதிசிவனார் எனும் சிவபெருமான் வழங்கிய இந்து வேதமும் இந்து மதக் கருத்துக்களும் குறிப்பிட்ட இனத்திற்கு என்றில்லாமல் உலக மக்களுக்கான ஒன்று. “இந்து மறுமலர்ச்சி இயக்கம்” இவற்றின் மூலம் உலக மதங்களுக்கிடையே சமத்துவம் சகோதரத்துவம், பொதுவுடமைக் கூட்டுறவை உருவாக்கி உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை அமைக்கும் நோக்கத்தில் இயங்கிவருகிறது. “இந்து மறுமலர்ச்சி இயக்கம்” எந்த ஒரு பிற மதத்துடனும் பகமை பாராட்டாமல் ஒற்றுமையுடன் நட்புடன் இயங்கும். எந்த பிற மதத்திற்கும் எதிரான பகையான கருத்துக்களை வெளியிடாது.
 
இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் செயல்பாடுகள் :
கீழே கூறப்படும் அனைத்தும் தமிழகம் மற்றும் இந்தியா நாட்டில் மட்டுமன்றி உலகளவிலும் நடத்தப்படும் செயல்பாடுகள் ஆகும்.
 
1. அருட்கோட்டங்கள்:
கருவூறார்களின் பதினெண்சித்தர் மடம் பீடத்தின் சீவநெறி எனும் சிவநெறி எனும் சைவநெறி எனும் இந்துவேத மதத்தின் அண்டபேரண்ட அருளாட்சி மொழியான அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தமிழ்மொழியின் அடிப்படையில், கோயில்களை மீண்டும் இக்கலியுகத்தில் அருள் ஊற்றெடுக்கும் கருவறைகளைக் கொண்ட அருட்கோட்டங்களாக மாற்றுதல் மற்றும் தேவையின்பால் புதிய அருட்கோட்டங்கள் அமைத்தல்.
2. அருட்பணி:
a)  அனைத்துவகைக் கோயில்களுக்கும், பிறப்புமுதல் இறப்புவரை உள்ள இல்லத்து விழாக்களுக்கும், பொது மக்களுக்கும் அல்லது தனிமனித அமைப்புகக்கும் ஓமம், ஓகம், யாகம், யக்ஞம், வேள்வி, பூசைகள் போன்றவற்றை நடத்துதல்.
b)  கோயில் குடமுழுக்கு, கோயில் கருவறை உயிர்ப்பு, புத்துயிர்ப்பு முழுக்காட்டு போன்றவற்றை நடத்துதல்
c)  விழாக்கள், பண்டிகைகள், திருநாட்களில் பூசைகள் யாகங்கள் நடத்துதல்.
d)  அருட்கணிப்பு கூறி மக்களின் பிணிகளை பிறச்சினைகளைத் தீர்த்தல்
e)  பூசை மந்திரங்களை மக்களுக்கு புத்தகங்களாக, CD, DVD, Chanting box போன்றவை மூலம் மந்திரங்களை மக்களுக்கு இலவசமாகக் கொடுத்தல் அல்லது மலிவான விலையில் விற்பனை செய்தல்.
 
3. பயிற்சி அளித்தல்:
கீழ்கண்ட பயிற்சிகள் அரசு சார்ந்தவர்களுக்கும், தனியார் நிறுவனம் அல்லது இயக்கம் சார்ந்தவர்களுக்கும் மற்றும் பொதுவான தனிமனிதர்களுக்கும் வழங்கப்படும்.
a)  தனிமனித & குடும்ப பூசைகள், குடும்ப விழாக்களுக்கு பயிற்சிகள்:
தனிமனித பத்தி, சத்தி, சித்தி முத்தியால் பெறும் உயர்வுக்கும், குடும்பத்தினர் நலனுக்கும், குடும்ப வளத்திற்கும், மானுட பிறப்பு முதல் வீடுபேறுவரையுள்ள அனைத்து குடும்ப விழாக்களுக்கும் உரிய பூசைகளும், முறைகளும், வழிபாடுகளும் அருளூறு அமுதத் தெய்வீகச் செந்தழிழ் மொழியில் கற்றுக்கொடுத்தல். அருளுலகப் பக்குவமும் யோகமும் உள்ளோருக்கு தீட்சை வழங்குதல்.
b)  பரிகாரப் பூசை & யாகப் பயிற்சிகள்:
இப்பிறப்பு, முற்பிறப்பு, மறுபிறப்புத் தொடர்பான சாபங்கள், பாவங்கள், தோசங்கள், ஊழ்விளை, ஆள்வினை, சூழ்வினை, விதி, வினை, மற்றும் நாக தோம், செவ்வாய் தோசம், களத்திற தோசம், சனி போன்ற பல பாதிப்புகளுக்குரிய பரிகாரப் பயிற்சி அளித்தல்.
c)  கோயில் கருவறை உயிர்ப்பு, புத்துயிர்ப்பு, குடமுழுக்கு பயிற்சிகள்:
கோயில்களின், ஆலயங்களின், கிராம தேவ தேவதைக் கோயில்களின், குலதெய்வக் கோயில்களின் அன்றாட வழிபாட்டிற்கான குரு, குருமார், குருக்கள், பூசாறி பயிற்சிகளும், கோயில் பணியாளர்களுக்குரிய அனைத்து பயிற்சிகளும், மந்தரிக்கவும் கற்றுக் கொடுக்கப்பட்டு பயிற்சி அளித்தல்.
 
d)  பூசாறி பயிற்சிகள்:
கோயில்களின் ஆலயங்களின், குலதெய்வக் கோயில்களின் அன்றாட வழிபாட்டிற்கான குரு, குருமார், குருக்கள், பூசாறி பயிற்சிகளுக்கும், கோயில் பணியாளர்களுக்குரிய அனைத்து பயிற்சிகளுக்கும், மந்தரிக்கவும் கற்றுக் கொடுத்தல்.
 
 
 
e)  குருபாரம்பரிய மெய்ஞ்ஞானாக் கலைகள் கற்பித்தல்:
திருவாணை, கருவாணை, அருளாணை பெற்று அருளுலகப் பக்குவமும், தாத்தாக்கள் ஆத்தாக்கள் அனுமதியும் பெற்றவர்களுக்கு கீழ்கண்ட இருபத்தைந்துக்கும் மேற்பட்ட 48வகைப்பட்ட கலைகள் கற்றுக்கொடுத்தல்….
 
4. கல்வி:
1.   கல்லூரிகள், பல்கலைக் கழகங்கள் அமைத்து அதன் மூலம் மக்களுக்கு சித்தர்நெறி சார்ந்த குருகுலக் கல்வி மற்றும் பொதுக் கல்வியும் கொடுத்தல்.
2.   ஏழை எளியவர்களுக்கு இலவசமாக சித்தர்நெறிப் பயிற்சியும், தத்துவப் பயிற்சியும், கல்வியும் வழங்குதல்.
3.   சித்தர்நெறி மருத்துவக் கல்லூரிகள் மூலம் கல்வி.
4.   ஐந்திறம் எனும் பஞ்சாங்க கலைகள் சோதிடக் கலைகள் பயிற்றுவித்தல்
5.   சித்தர்நெறியில் அருளப் பெற்ற அனைத்து விதமான மெய்ஞ்ஞானக் கலைகளையும் மக்களுக்கு கற்றுக்கொடுத்தல் (வானவியல், விண்ணியல், பெயரியல், அங்கவியல், வரியியல், மனையியல், எண்ணியல், இயற்பியல் போன்ற பல மேலே குறிக்கப்பட்ட மெய்ஞ்ஞானக் கலைகளையும்)
6.   தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு பற்றிய பதினெண்சித்தர்கள் குறிப்புகளை மக்களுக்கு கற்பித்தல்.
 
5. சேவை:
1.   தனிமனித நன்மைக்கும் மேன்மைக்கும், குடும்ப நன்மைக்கும் மேன்மைக்கும், சமுதாய நன்மைக்கும் மேன்மைக்கும், அரசியல் நன்மைக்கும் மேன்மைக்கும் மற்றும் உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கும், உலகெங்கும் சமத்துவம், சகோதர தத்துவம், பொதுவுடமைக் கூட்டுறவு செழித்திடவும், பதினோராவது பதினெண்சித்தர் பீடாதிபதி, தஞ்சைப் பெரிய கோயிலைக்கட்டிய குருமகா சன்னிதானம் ஞாலகுரு சித்தர் அண்டபேரண்ட அருட்பேரரசர் தாத்தா காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் பதினெட்டு அருளாணைகளை நிறைவேற்றுதல்.
2.   இயற்கை வளங்களைப் பராமரித்தல் மற்றும் கனிமங்களை காத்தல்.
3.   உழவுத் தொழிலை ஆதரித்து பயிரினங்களை உயிரினங்களை மேம்படுத்துதல்.
4.   ஆதரவற்ற குழந்தைகளை, மூத்தோர்களை பேணி வளர்த்தல்.
5.   சித்த மருத்துவம் மூலம் மருந்துகள் தயாரித்து மக்களுக்கு இலவசமாக அல்லது மலிவு விலையில் விற்பனை செய்தல்.
6.   சித்தர்நெறி மருத்துவமனைகள் அமைத்து மக்கள் பிணி தீர்த்தல்.
7.   முடிகயிறு, தாயத்து, சக்கரம், காப்பு, போன்ற பூசனைப் பொருட்களை தயாரித்தோ அல்லது வாங்கி யாகங்களில் பூசைகளில் அருளேற்றியோ மக்களுக்கு விற்பனை செய்தல் அல்லது இலவசமாக கொடுத்தல்.
8.   இன்றைக்கு மறைக்கப்பட்ட ஒதுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட பதினெண்சித்தர்கள் அருளிய அனைத்துவகை கலைகளையும் எழுச்சியுறச் செய்து மக்களுக்கு நலன் விளைவித்தல்.
9.   தமிழ் மொழி, தமிழ் இனம், தமிழ்நாடு பற்றிய பதினெண்சித்தர்கள் குறிப்புகளை மக்களுக்கு அச்சிட்ட அறிக்கைகள், அறிவிக்கைகள், மேடைப் பிரச்சாரம் போன்றவை மூலம் கொண்டு சேர்த்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல். அதற்கு திரைப்படங்கள், குறும்படங்கள், வலைதள, இணையதள காணொளிகள் செய்திகள் கட்டுரைகள் போன்றவைகளையும் பயன்படுத்துதல்.
 
போன்ற சேவைகளில் குருபாரம்பரிய தீட்சை பெற்று சித்தரடியான்களாக, சித்தரடியாள்களாக, சித்தரடியார்களாக இருப்பவர்கள், பொது மக்கள், ஆர்வலர்கள், ஏந்தாளர்கள், பற்றாளர்கள், தமிழ் பிரியர்கள், வரலாற்று வல்லுனர்கள், பகுத்தறிவுவாதிகள், மெய்ஞ்ஞானிகள் மூலம் இந்து மறுமலர்ச்சி இயக்கம் உலக மக்களின் நன்மைக்கும் மேன்மைக்கும் செயல்பட்டுக் கொண்டு வருகிறது.
 

உங்களுக்கு தெரியுமா?
வாசக களஞ்சியம்
இரகசியக் குறிப்புகள்
இன்றைய நாள்
குடும்பநல குறிப்புகள்