ஏன் இந்து மறுமலர்ச்சி இயக்கத்திற்கு
நன்கொடை (Donation) கொடுக்க வேண்டும்?
🌹அன்புள்ளம் தொண்டுள்ளம் கொண்ட
மக்களுக்கு அன்பு வணக்கங்கள்!
🙏
இந்து மறுமலர்ச்சி இயக்கம் உலக மக்கள் அனைவரிடம் இருந்து நன்கொடையை
வரவேற்கிறது. (இது வட ஆரிய பிறாமணர்களின் சமசுக்கிருத சனாதான ஹிந்துமத
இயக்கம் அல்ல! முழுமுதற் கடவுளான சிவபெருமான் உலக மக்களுக்கு வழங்கிய
இந்துவேத மத இயக்கம்!!)
நன்கொடை ஒரு ரூபாயாகக் கூட இருக்கலாம். நாளொன்று
ஒரு ரூபாயாக் கூட இருக்கலாம் அல்லது கோடிகளில் கூட கொடுக்கலாம்.
மக்களின் பிறச்சினைகளுக்கு வழி என்ன?
கலியுகத்தின் பிடியில், எல்லோருடைய வீடுகளிலும் சரி... எல்லா நாடுகளிலும்
சரி... ஏ........கப்பட்ட பிறச்சினைகள். தனக்கு, தன் குடும்பத்திற்கு, தெரு, ஊர், உலகம்
என எல்லா மக்களுக்கும் பிறச்சினைகள்! எங்குமே பிறச்சினைகள்! எண்ணற்ற பிறச்சினைகள்!!
அரசியலிலும் சரி... அரசாங்கத்திலும் சரி... உலகில் வாழும் ஒவ்வொரு மக்களுக்குமே பிறச்சினைகள்!
இயற்கை வளங்களுக்கும் பிறச்சினை! பயிரினங்களுக்கும் பிறச்சினை! உயிரினங்களுக்கும் பிறச்சினை!
பிறச்சினை! பிறச்சினை!! பிறச்சினை!!!
சரிப்பா... என்னதான் தீர்வு? வழியே இல்லையா?
வழி உண்டு...! மிகவும் எளிய வழிதான். பிறச்சினைகள் தீர “அருள்”...
“அருள்” என்று சொல்லுகிறோமே... அதாவது... இறைமை சத்தி... இறைமை ஆற்றல்... இறை அணுக்கள்...
அருள் அணுக்கள்... கடவுள் அருள் என்று சொல்லுகிறோமே... அது மட்டும்ம்ம்ம்ம்ம்ம் போதும்!!! ஒவ்வொருவரின்
தனி மனிதப் பிறச்சினை முதல் உலகப் பிறச்சினைவரை எல்லாமே சரியாகிடும்!!!
ஓ... சரி.... அந்த அருள் எப்படிக் கிடைக்கும்? அதைத்தான் இந்து மறுமலர்ச்சி இயக்கம் செய்து வருகின்றது.
இன்றைய இந்து மறுமலர்ச்சி இயக்கம் பற்றி...
கோடான கோடி ஆண்டுகளாக..., நமது அண்டம்போல பல கோடான கோடி அண்டங்களிலும்
அண்டபேரண்டங்களிலும் அருளாட்சி மொழியாக இருந்து அருளாட்சி புரிந்து ஆண்டு கொண்டிருக்கும்
ஒரே ஓர் ஆட்சி மொழியான... அண்டபேரண்டங்களை ஆண்டு கொண்டிருக்கும் பதினெண்சித்தர்களின்
தாய்மொழியான... அருளூறு.... அமுத.... தெய்வீக... செந்தமிழ் மொழியான... நமது தாய்மொழியான...
தமிழ்மொழிதான் அது!!! இத் தேவமொழி தமிழ்மொழியானது நாம் வாழுகின்ற இப்புவியிலே 100(நூறு)கோடி ஆண்டுகளுக்கு முன்னரே பதினெண்சித்தர்களாலும் பதினெட்டாம்படிக் கருப்புகளாலும்
பேசப்பட்ட மொழி.
தமிழ்மொழியில்
பேசுவதே பூசை! தமிழ்மொழியை எழுதுவதும் கற்பிப்பதும் பெருந்தவத்திற்குச் சமம்...!! என்று
அண்டபேரண்டம் ஆளும் பதினெண்சித்தர்கள் இந்துவேதத்தில் கூறுகிறார்கள்.
முழுமுதற் கடவுளான சிவபெருமான் நாம் வாழும் இப்புவிக்கும் தேவமொழி
வேதமொழி தமிழ்மொழியில் இந்து வேதத்தை 43,73,124
ஆண்டுகளுக்கு முன்னர், நான்கு உகங்களுக்கு
முன்னர் வழங்கினார். (தமிழ் மொழியும் தமிழினமும் வெறும்
10,000 ஆண்டுகளுக்கு முந்தையது என்பது முற்றிலும் தவறு!)
தமிழ் மொழியும் இந்துவேதமும் உலகமக்கள் அனைவருக்குமே வழங்கப்பட்ட
மொழி! இன்று பல மதங்களாக மொழிபேசுபவர்களாக மக்கள் வாழ்ந்து வந்தாலும், உலக மக்கள் அனைவருமே
அனைத்து நாடுகளிலுமே கடந்த யுகங்களில் பயன்படுத்திய மொழி தமிழ்மொழி! வேதம் இந்துவேதம்!
தமிழ்மொழியும் இந்துவேதமும்தான் உலக மதங்களுக்கிடையே உள்ள சண்டை
சச்சரவுகளை நீக்கி சமத்துவம், சகோதரத்துவம்,
பொதுவுடமைக் கூட்டுறவு ஆகிய மூன்றையும் உலகில் நிலைநாட்டி... உலக ஆன்மநேய ஒருமைப்பாட்டை
அமைக்கும்!!! அம் மாபெரும் பணியில்தான் பேரருள்மிகு 12வது
பதினெண்சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்களின் தலைமையில்,
அருள்மிகு சித்தர் இராமதேவர் ஈசுவராச்சாரியார் அவர்களின்
வழிகாட்டலில் இந்து மறுமலர்ச்சி இயக்கம் செயல்பட்டு வருகிறது.
இந்து மறுமலர்ச்சி இயக்கம் ஆற்றிவரும் பணிகள்...
அப் பொற்காலத்தை
அமைக்கும் புனிதமான மகத்தான பணிகளில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் சித்தர்கள், சன்னிதானங்கள்,
சித்தரடியான்கள் சித்தர்நெறி எனும் இந்துவேத மதத்தின் நெறிமுறைப்படி தெய்வீகச் செந்தமிழ்
மொழியிலே ஆற்றிவரும் சில பணிகளை மட்டும் குறிப்பிடுகிறோம் கீழே...
y கிராமம்
முதல் மாநகரங்கள் வரையில் ஆங்காங்கே உள்ள கோயில்களில் இறைமைச் சத்தி குன்றியிருக்கும்
கடவுள்களுக்கு இயக்கத்தினர் கோயில் குடமுழுக்குகள்,
முழுக்காட்டுகள், புத்துயிர்ப்புகள் செய்து தெய்வீக ஆற்றலை பெருக்கிவிடுதல்
மூலம் அக்கடவுள் அவ்வட்டார மக்களுக்கு அருளை அள்ளி வழங்கி காத்து அருள்புரிந்து வருகின்றார்கள்.
y கிராமம்
முதல் மாநகரங்கள் வரையில் ஆங்காங்கே உள்ள கோயில்களில் ஓமம் ஓகம் யாகம் யக்ஞம் வேள்விகளை
இயக்கத்தினர் செய்து கோயிலில் உள்ள அனைத்துவகைக் கடவுள்களுக்கும் கோயில் நிர்வாகிகளுக்கும்
அவ்வட்டார மக்களுக்கும் விழிச்சியும் எழுச்சியும் கிடைத்து தொல்லைகள் தடைகள் பிறச்சினைகள்
நீங்கி அருளும் பொருளும் பெற்று நலமான வளமான வாழ்வு பெற்றிட வழிவகை செய்துவருகிறோம்.
y திருவிளக்குப்
பூசைகளை கோயில்களிலும் இல்லங்களிலும் செய்து மக்கள் வேண்டுதல்கள் நிறைவேறிட உதவி வருகிறோம்.
y பிறதோசப்
பூசைகள், அமாவாசை பூசைகள், முழுநிலவு பூசைகள், மூன்றாம் பிறைப் பூசைகள், சதுர்த்தி
பூசைகளை போன்ற பலதரப்பட்ட பூசைகளைக் கோயில்களிலும் இல்லங்களிலும் செய்து மக்கள் வேண்டுதல்களை
நிறைவேற்றி வருகிறோம்.
y மனிதனின்
பிறப்புமுதல் இறப்புவரை உள்ள இல்லத்து விழாக்களை நடத்திக் கொடுத்து குடும்பத்தினர்
நலனுக்குக்காகவும் வளத்திற்காகவும் அனைத்து வகை அருட்பாதுகாப்பிற்காகவும், அக் குடும்பத்தினருக்கு
குடும்ப ஆண்டவர்களின், குலதெய்வங்களின், ஊர் தேவதேவதைகளின் துணையைப் பெறச்செய்து, வாழ
இருக்கும் வாழ்க்கை இப்பிறவியில் இனிதே கடந்திடுவதற்கு அருளும் ஆசியும் ஞானமும் பெற்றிட
உதவி வருகின்றோம்.
y ஒவ்வொருவருக்கும்
தேவையான தனிமனிதப் பயிற்சிகள், அன்றாடப் பூசைகள், இல்லத்துப் பூசைகள், பலவகை பூசை,
யாகம் தவப் பயிற்சிகள், கோயில் பூசாறிப் பயிற்சிகள் என்று அனைத்துவகைப் பயிற்சிகளையும்
ஆன்லைன் மூலமாகவும், நேரடியாகச் சென்று தீட்சை வழங்கி வழிகாட்டியும் வருகின்றோம்.
y பரிகாரப்
பூசைகள் மூலம் மக்கள் தங்களது பலவகைச் சாபங்கள், தோசங்கள், விதி வினைகளிலிருந்து விடுபட
உதவி வருகிறோம்.
y கோயில்களை மீண்டும் இக்கலியுகத்தில் அருள் ஊற்றெடுக்கும்
கருவறைகளைக் கொண்ட அருட்கோட்டங்களாக மாற்றுதல் மற்றும்
தேவையின்பால் புதிய அருட்கோட்டங்கள் அமைத்தல் போன்ற பணிகளையும் செய்து வருகின்றோம்.
y குலதெய்வ,
கிராம, நாட்டுக் கடவுளர்களுக்கு பண்டிகைகள் விழாக்கள் நாட்களில் பூசைகள் யாகங்கள் நடத்தி
வருகின்றோம்.
y அருட்கணிப்பால்
மக்களின் பிறச்சினையைத் தீர்த்து வருகின்றோம்.
y அழிக்கப்பட்ட
மறைக்கப்பட்ட தமிழ் மொழி பற்றிய செய்திகளை, வரலாறுகளை,.... தமிழ் இனம் பற்றிய செய்திகளை
வரலாறுகளை, இளமுறியாக் கண்டம் முதல் இன்றுள்ள உலகம் வரை பற்றிய செய்திகளை வரலாறுகளை
மக்களுக்கு பரப்பி வருகின்றோம்.
y விண்ணுலகம்
மண்ணுலகம், கடவுள்கள், கடவுள் வகைகள், கடவுள் உருவாகும் விதம், கடவுள்களை மக்கள் உருவாக்கும்
கலை, கடவுள்கள் செயல்படும் விதம், மக்கள் வழிபடும் முறைகள் பற்றி எடுத்துரைத்து வருகின்றோம்.
y எண்ணிலா
செயல்பாடுகள் இதுபோன்று இருப்பினும் விரிவஞ்சி இத்துடன் முடித்துக்கொள்கிறோம்.
y பூசை மட்டும் போதாது; இந்து மதத் தத்துவங்களும் இருந்தால்தான்
தனி
மனித, குடும்ப, சமுதாய, அரசியல் வாழ்க்கை விழிச்சி எழுச்சி வளர்ச்சி உயர்ச்சி பெற்றிடுமென்பதால்
தத்துவங்களையும் சோசியல் மீடியாக்கள் மூலம் தொடர்ச்சியாக பரப்பி, ஆன்லைன் வகுப்புகளும்
எடுத்து வருகின்றோம்.
y இங்கே கூறமுடியாத
இரகசிய அருளுலகச் செயல்பாடுகளை உலக மக்கள்
நலனுக்காக செய்துவருகின்றோம்.
y மேலே கூறப்பட்ட
செயல்பாடுகளை செவ்வனே செய்துதர...
y மந்திரங்கள்,
புத்தகங்கள் அச்சிட்டு இலவசமாக அல்லது மலிவு விலையில் மக்களுக்குக் கொடுக்க...
y தனிப்பட்ட
தொலைக்காட்சி உருவாக்கி உலகமக்களுக்கு உதவிட...
y பாடசாலைகள்,
வேதசாலைகள், வைத்தியசாலைகள், நூலகங்கள் ஆங்காங்க அமைக்க...
y இந்துவேத
மதம் சார்ந்த பாலர் பள்ளிகள், ஆரம்பப் பள்ளிகள், மேல்நிலைப் பள்ளிகள், கல்லூரிகள் அமைக்க.
y ஆங்காங்கே
அருட்கோட்டம், வார வழிபாட்டு மன்றம், நூலகம், மகளிர் மன்றம், இளைஞர் நற்பணி மன்றம்,
இறைப்பணிக் குழு, பத்தி பசணை மடம், தியான & தவ பீடம், கலந்துரையாடல் அரங்கம், தமிழ்ச்சங்கம்,
அலுவலகம், விளக்குப் பூசைக் கூடம் என பல அமைப்புகளை நிறுவிட
y
பூசை மந்திரங்களை
புத்தகங்களாக, CD, DVD, Chanting box போன்றவை மூலம் மந்திரங்களை மக்களுக்கு இலவசமாகக்
கொடுத்தல் அல்லது மலிவான விலையில் விற்றிட...
தாங்கள் அனைவரும் இந்து மறுமலர்ச்சி இயக்கத்திற்கு நன்கொடை வழங்கி
உதவிட வேண்டுகிறோம். நன்கொடைக்கு நீங்கள் தரும் பணம் உங்கள் உழைப்பில் வந்தது. உங்கள்
உழைப்பை இப்பணிகளில் நீங்கள் நேரடியாகச் செலுத்த முடியாத காரணத்தால் உங்கள் நன்கொடை
உழைக்கக் காத்திருக்கும் மக்களுக்கு வழங்கி உழைப்பைப் பெற்றுக்கொள்கிறோம்.
எனவே வழங்கும் நன்கொடை என்பது உங்கள் உழைப்பையே வழங்குவதாகும். நன்கொடை செய்ய வசதியில்லாதவர்கள் எம்முடன் இணைந்து பணியாற்ற வரவேற்கிறோம்.
தொடர்பு கொள்ளுங்கள்.
🔱🔥ஓம் பராசத்தி நமசிவாய சிவாயநம போற்றி!
🔥⚜️
அருளாட்சி அமைப்போம்!
அருளாட்சி காப்போம்!!
அருளாட்சி வளர்ப்போம்!!!